டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

அனுமார்கோவில் படித்துறை கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுக்க இரும்பு வேலி

மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலி அமைக்க ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:52 am IST

மதுரை சிம்மக்கல் அனுமார்கோவில் படித்துறை பகுதியில் கால்வாயில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க இரும்பு வேலி அமைக்க ஆணையர் அனீஷ்சேகர் உத்தரவிட்டார்.
    மதுரை சிம்மக்கல் பகுதியில் மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் புதன்கிழமை காலை ஆய்வை மேற்கொண்டார். அப்போது அவர் சிம்மக்கல் அனுமார் கோவில் படித்துறை பகுதியில் உள்ள அனுப்பானடி வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மைப் பணியைப் பார்வையிட்டார். அப்போது கால்வாயில் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்படுவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் 
   இருபுறமும் இரும்புக் கம்பி வேலி அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.  மேலும், மாடிகளில் இருந்து கால்வாயில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்டறிந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் ஆணையர் உத்தரவிட்டார்.  திருப்பரங்குன்றம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆழ்துளைக்கிணறுகள், திருநகர் அண்ணா பூங்கா மேம்பாட்டுப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்த ஆணையர், பூங்காவில் குப்பைகளில் இருந்து உரம் தயாரித்து அதைத் தோட்ட செடிகளுக்கு உரமாக்கவும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.