பழிக்குப் பழி: இளைஞரை அரிவாளால் வெட்டிய 5 பேர் கைது

மதுரையில் ரௌடி கொலை சம்பவத்தில் பழிக்குப் பழி தீர்ப்பதற்காக இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற 5 பேரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
Updated on
1 min read

மதுரையில் ரௌடி கொலை சம்பவத்தில் பழிக்குப் பழி தீர்ப்பதற்காக இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற 5 பேரை, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
      மதுரை திடீர் நகர் கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வாசுதேவன் மகன் பாலாஜி பாண்டி (22). இவர், அரசரடி ஹார்வி நகர் பகுதியில் சனிக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தபோது, இவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த பாலாஜி பாண்டியின் சப்தம் கேட்டு, அப்பகுதியினர் திரண்டு வந்ததால், கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது தொடர்பாக பாலாஜி பாண்டி அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.     இதில், சில வாரங்களுக்கு முன் திடீர் நகர் பகுதியில் ஜாபர் என்ற ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில், பாலாஜி பாண்டிக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஜாபரின் நண்பர்கள், பழிக்குப் பழியாக பாலாஜி பாண்டியை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
    அதையடுத்து, பாலாஜி பாண்டியை கொலை செய்ய முயன்ற சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனீஸ்வரன் (23), ரயில்வே காலனியை சேர்ந்த சரவணக்குமார் (23), நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் (23),  திடீர் நகரைச் சேர்ந்த முத்துமணி (23), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலா (23) ஆகிய 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com