நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வுதள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

அலட்சியம்: அரசு மருத்துவமனையில் மீண்டும் தீ விபத்து

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பற்றி எரிந்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:14 am

DIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பற்றி எரிந்தது.
      அரசு ராஜாஜி மருத்துவமனையின் பின்புற வாசலில் பிணவறை உள்ளது. அதன் எதிரே மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட அதிகமான குப்பைகள் கொட்டி குவித்து வைக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக அகற்றப்படாததால், மலைபோல் குவிந்திருந்த குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை பரப்பியது. 
    இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், குப்பைகளை அகற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 
    இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த குப்பை குவியலில் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டுச் சென்றுவிட்டனர். இதனால் தீப்பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.
    தகவலின்பேரில் அங்கு வந்த தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்தும்,  எஞ்சிய குப்பைகளை அகற்றவும் மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.     இந்நிலையில், எஞ்சிக் கிடந்த குப்பைக் குவியலில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தீப்பிடித்து எரிந்தது. மீண்டும் தீயணைப்புப் படையினர் சென்று தீயை அணைத்தனர். அப்போது தீயணைப்பு வீரர்கள், குப்பைக் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்திச் சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.