மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையால் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நடைபெறும் என்று ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மா திட்ட முகாமில் அந்தந்த வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறையின் அனைத்து அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவர். ஆகவே, வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் பெற இந்த முகாமில் மனுக்கள் அளிக்கலாம்.
முகாம் நடைபெறும் கிராமங்கள்: மேலூர் - கருத்தப்புளியம்பட்டி, உசிலம்பட்டி - பொட்டுலுப்பட்டி, மதுரை கிழக்கு - மாங்குளம் 2-ஆவது பிட், வாடிப்பட்டி - எர்ரம்பட்டி, திருமங்கலம் - கரிசல்காளாம்பட்டி, மதுரை வடக்கு - தத்தனேரி குரூப், பேரையூர் - குடிசேரி, மதுரை தெற்கு - குசவன்குண்டு, மதுரை மேற்கு - விளாச்சேரி, திருப்பரங்குன்றம்- சாக்கிலிப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









