அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து மோசடி: இளைஞர் கைது

திருமங்கலம் அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பல லட்சம் மோசடி செய்த இளைஞரை  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 

Updated On :20 ஆகஸ்ட் 2018, 10:20 am IST

திருமங்கலம் அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி போல் நடித்து பல லட்சம் மோசடி செய்த இளைஞரை  போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். 
  மதுரை பெருங்குடி காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (46). இவர் ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்  சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி மகன் செந்தில் (35). இந்நிலையில் செந்தில் தன்னிடம் புதிய ரக கார் ஒன்று உள்ளதாகக் கூறி , செல்வத்திடம் ரூ.7 லட்சம் பெற்றுள்ளார். பின்னர் திருமங்கலம் சுங்கச்சாவடி அருகே காரைக் கொண்டு வருவதாகக் கூறினார். அங்கு செந்தில் சொன்னபடி காரைக் கொண்டு வரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில் கல்வீசி செல்வத்தை தாக்க முயன்றுள்ளார்.   இதுதொடர்பாக செல்வம் திருமங்கலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் செந்தில் மீது  போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் செந்தில் மீது இது போன்ற பல வழக்குகள் உள்ளதும், ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததும்  தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரை போலீஸார் மோசடி வழக்கில் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.