ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை 

பெரியாறு பாசனத் திட்டத்தில் சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாயில்  தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

பெரியாறு பாசனத் திட்டத்தில் சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாயில்  தண்ணீர் திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 இதுதொடர்பாக மேலூர் வட்டம் கருங்காலக்குடி, வஞ்சிநகரம், கச்சிராயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன் விவரம்:  பெரியாறு பாசனத் திட்டத்தில் சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாய் புலிப்பட்டி கிராமத்தில் இருந்து சிங்கம்புணரி வரை சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.  
இப்பகுதியின் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம் மட்டுமே.  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக்கக் கால்வாயில் தண்ணீர் வராததாலும், போதிய மழை இல்லாததாலும் இப்பகுதி விவசாயிகள் குடிநீருக்குக் கூட பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
தற்போது முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  
ஆகவே, சிங்கம்புணரி விரிவாக்கக் கால்வாய் பகுதிகளுக்கு விரைவில் முழு அளவில் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.