ஜூனில் கடைசி 2 வாரங்களில் வங்கிகளில் குவிந்த ரூ. 7 லட்சம் கோடி டெபாசிட்!டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலை தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவுதேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்மேற்கு கரையில் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்க எம்.பி.!தேசியக் கல்வி கொள்கையை செயல்படுத்தாதது சரியானது அல்ல: ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா்
/

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை: அரசு ஊழியர் சங்க போராட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை

Updated On :31 டிசம்பர் 2018, 8:57 am IST

தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் ஜனவரி 8, 9 அகில இந்திய வேலைநிறுத்தம் தொடர்பாக மாநில போராட்டக்குழுக் கூட்டம் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் மு.சுப்ரமணியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறைகளின் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைவரையும் வரையறை செய்ய வேண்டும். அரசுத்துறைகளில் ஒப்பந்த, தினக்கூலி மற்றும் புற ஆதார முறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிகளை வரன்முறைப்படுத்தி அனைத்து காலிப்பணியிடங்களையும் சட்டபூர்வ நியமன விதிகளின் கீழ் நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருள்கள், ஊக வணிகம் மூலம் விற்பனை செய்வதை தடை செய்து பொது விநியோக முறையை வலுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 
வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்கள் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி குறியீட்டெண்ணுடன் இணைக்கப்பட்ட குறைந்த பட்ச கூலியாக ரூ.18 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும்.  மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை கைவிடவேண்டும். நிரந்தர பணியிடங்களுக்கு ஒப்பந்த நியமனங்களை கைவிடுவதுடன் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமமான ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களில் திருத்தங்கள் செய்வதை கைவிட வேண்டும். போனஸ் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கான உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.