மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் மாணவர் சேர்க்கை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்ட கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார். 

Updated On :7 ஜூன் 2018, 8:16 am IST

மதுரை மாவட்ட கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார். 
 இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாவட்டத்தில் அரசு கள்ளர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கான 24 விடுதிகள் செயல்படுகின்றன. அதன்படி பள்ளி மாணவர்க்கு 16, மாணவியருக்கு 5, 
கல்லூரி மாணவியருக்கு 1, தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 2 என விடுதிகள் செயல்படுகின்றன. 
 பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்பயிற்சி கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியர் விடுதிகளில் சேரத்தகுதியுடையவர்களாவர்.
 கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியரும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். 
   தகுதிகள்: விடுதிகளில் சேர விரும்புவோரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் மிகாமல் இருக்கவேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கவேண்டும். இந்தத் தூர விதிகள் மாணவியருக்குப் பொருந்தாது. 
 தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளிகளிடமிருந்தோ அல்லது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
 பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர், காப்பாளினியிடமும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் 20 ஆம் தேதிக்குள் (20.06.2018) வழங்கவேண்டும்.
 தொழிற்பயிற்சி மற்றும் கல்லூரி விடுதிகளைப் பொருத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர், காப்பாளினியிடமோ, கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநரிடமோ வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை வழங்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.