மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பூட்டிய வீட்டில் 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவர்பட்டியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மனைவி ருக்மணி(55). இவர் மஞ்சமலையாண்டி கோயில் திருவிழாவையொட்டி குடும்பத்துடன் ஜூன் 3-ஆம் தேதி சென்றுவிட்டார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ருக்மணி அளித்தப்புகாரின்பேரில் பாலமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








