சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மாநிலத்திலேயே முதல்முறையாக சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தொழில் முனைவோர் பயிற்சி

மாநிலத்திலேயே முதல்முறையாக மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

மாநிலத்திலேயே முதல்முறையாக மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மடீட்சியா சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றார். முதுகலை ஆசிரியர் எஸ்.குகன் முகாமை ஒருங்கிணைத்தார். இதில், மடீட்சியா வர்த்தக தகவல் மைய இயக்குநர் ஆர்.அரங்கண்ணல் பேசியது: கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்த தொழில்முனைவோர் பயிற்சி, தற்போது பள்ளி மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் தொழில்முனைவோராக விரும்பும் மாணவர்கள் என்ன தொழில் தொடங்குவது?, தொழிலுக்கு தேவைப்படும் உபகரணங்கள், மூலதனம், உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்ந்து, தொழில் தொடங்க வேண்டும் என்றார்.
மாவட்ட தொழில் மைய முன்னாள் உதவி இயக்குநர் சிவ.அய்யனார் பேசுகையில், "மாணவர்கள் அரசு வேலையை மட்டும் நம்பியிருப்பது சரியல்ல. படித்து முடிக்கும் அனைவருக்கும் அரசு வேலை என்பது இயலாத காரியம். எனவே, தொழில் தொடங்கி அதன் மூலம் பலருக்கும் நாம் வேலை அளிப்பவராக மாறுவது சிறந்தது. தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றார்.
 நிகழ்ச்சியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளைச் சேர்ந்த தொழில் கல்வி பயிலும் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். வணிகவியல் ஆசிரியர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.