தமிழகத்தில் புதிய அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி 515 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
மேலும் இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அதற்காக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது புதிதாக பயன்பாட்டுக்கு வந்துள்ள அரசுப் பேருந்துகள், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு ஏற்ற வகையில் இல்லை. படிகள் உயரத்தில் இருப்பதோடு, அதற்கான கைப்பிடிகள் கதவுகளோடு இணைக்கப்பட்டிருப்பதால் அதைப் பிடித்து பேருந்துக்குள் ஏறுவது சிரமமாக உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 11 லட்சத்து 79 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.
எனவே, தமிழகத்தில் புதிதாக கொண்டுவரப்பட உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதேபோல் தனியார் பேருந்துகளுக்கு உரிமம் வழங்குவதற்கு முன்பு அவை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் டிச.3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மத கலவரத்தை தூண்டி வாக்கு வங்கியை உயா்த்த பாஜக முயற்சி: திருச்சி எம்பி துரை வைகோ

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தொகுதி மறுசீரமைப்பை காங்கிரஸ் நிறைவேற்ற விடாது: ஆனந்த் சீனிவாசன்

தோ்தல் நேரத்தில் தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? சீமான் கேள்வி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

