திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணியை காக்கும் வகையில் தனியார் ஆலைக்கு எதிராக தமிழக ஆறுகள் மீட்பு இயக்கம் சார்பில் வரும் 2019 ஜனவரி 30 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளது என இயக்கத்தலைவர் த.குருசாமி தெரிவித்தார்.
தமிழக ஆறுகள் மீட்பு இயக்கத்தின் முன்னோடி அமைப்பான உணவுத் தகவல் உரிமை அமைப்பின் (ஃபியான்) 30 ஆம் ஆண்டு விழா மதுரை சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் மற்றும் புதுதில்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைப்பின் தலைவர் டி.குருசாமி கூறியதாவது: கடந்த 1989 ஆம் ஆண்டு ஃபியான் அமைப்பு மதுரையில் தொடங்கப்பட்டது. அதன்படியே ஆறுகள் மீட்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு அது பொதுமக்கள் பங்களிப்புடன் நடந்து வருகிறது.
தமிழக ஆறுகளை மீட்டு, அதன்படி மக்களின் பொருளாதார, பாரம்பரியத்தை காப்பதே அமைப்பின் நோக்கமாகும். அதனடிப்படையிலே பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறோம். ஆறுகள் மீட்பு பாதயாத்திரை கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அதன்படி மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியர்களைக் கொண்ட மக்களவைக் குழு அமைக்கப்பட்டு ஆறுகள் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கிராம அளவிலும் நீர் நிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
மதுரையில் வைகை ஆற்றைக் காக்கும் வகையிலும் ஆட்சியர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்துள்ளோம். பொலிவுறு நகர்த்திட்டத்தில் வைகை ஆறு பாதுகாப்பு குறித்த எங்கள் ஆலோசனை ஏற்கப்படவுள்ளது. சீமைக்கருவேல மரப் பிரச்னையானது சமூகம் சார்ந்தது. ஆகவே அரசு கருவேல மரங்களை அகற்ற நினைத்தாலும், அதை பொதுமக்கள் பங்களிப்புடன் செயல்படுத்துவதும் அவசியமாகிறது. கருவேல மரம் அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் உள்ளன. மீத்தேன் வாயு எடுக்கும் பிரச்னையானது இந்தியாவின் பாரம்பரியமான உணவு உற்பத்தியை பாதிக்கும் வகையில் உள்ளது. தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மீத்தேன் திட்டம் செயல்படுத்துவதை அரசு கைவிடவேண்டும். வரும் 2019 ஜனவரி 30 ஆம் தேதி ஆறுகள் மீட்பு இயக்கம் சார்பில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் தாமிரவருணியில் இருந்து தனியார் ஆலைக்கு தண்ணீர் செல்வதை தடுக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் குஜராத்தைச் சேர்ந்த காந்தியவாதி ஹகன்சேத்தி முன்னிலை வகித்தார். புதுதில்லியைச் சேர்ந்த சுமன், சஞ்சய்ராய் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மூளையாகச் செயல்பட்ட தாவரவியல் பேராசிரியை கைது

கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் புதிய சாதனை!
பேல்பூரி 17-05-2026
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
