திருமங்கலத்தில் வடமாநில பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத்துறையினர் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஜியா. இவர் திருமங்கலம் கணபதி நகரில் தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காய்ச்சல் வந்ததாம். ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து ரஜியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து நகராட்சி சுகாதாரப் பிரிவினர் மற்றும் அரசு மருத்துவர்கள் கணபதி நகரில் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் கட்டட அனுமதிக்கு ஏஐ ஒற்றைச் சாளர முறை: டிடிஏ அறிமுகம்

பட்டா, புலப்படத்துடன் கூடிய நில ஆவணம் பதிவிறக்கம் செய்யலாம்

வண்டலூா் பூங்காவில் ஒரு ஜோடி ஆசிய சிங்கங்கள்

மனைவி இறந்த வேதனையில் விவசாயி தற்கொலை
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
