வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

சிலைகள் மாயமானதாக புகார்: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்  கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆய்வு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சிலைகள் மாயமான புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு

Updated On :22 அக்டோபர் 2018, 8:15 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் சிலைகள் மாயமான புகாரின்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் போலீஸார் கோயிலில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ராஜகோபுரம் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்தன. இந்நிலையில் கோயிலில் இருந்த திருவாச்சி சுடர் விளக்கு, பளிங்கு கல்லால் ஆன விஷ்ணு சிலை, ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்த பழங்கால தூணில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் உள்பட 7 சிலைகள் மாயமானதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு புகார் சென்றது.  அதன்பேரில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி மலைச்சாமி தலைமையில் திருச்சியில் இருந்து வந்த 5 பேர் கொண்ட குழுவினர், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள சிலைகள், திருவாச்சி ஆகியவை குறித்து விசாரித்தனர். மேலும் கோயிலின் அம்மன், சுவாமி சந்நிதிகள், தீ விபத்து நடந்த வீர வசந்த ராயர் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர். 
 அதையடுத்து கோயில் அதிகாரிகள் கோயிலில் உள்ள சிலைகள் குறித்த ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் காண்பித்தனர். மேலும் கோயிலில் இருந்து மாயமான புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்த இடங்களையும் காண்பித்தனர்.  காலை 11 மணி முதல் பல மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், கோயிலில் உள்ள சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை தெரிந்து கொண்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.
    இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு வட்டாரங்கள் கூறும்போது, "மதுரையில் குருவித்துறை குருபகவான் கோயிலில் சிலைகள் திருடப்பட்டு மீட்கப்பட்டன. மேலும் பல கோயில்களிலும் சிலைகள் திருடப்படுவது தொடர்கிறது. இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு வந்த புகாரின்பேரில்  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பது தெரிய வந்துள்ளது' என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.