தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி சாவு

பெருங்குடியை அடுத்த பரம்புப்பட்டி அருகே சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி இறந்தது

Updated On :22 அக்டோபர் 2018, 3:06 am

பெருங்குடியை அடுத்த பரம்புப்பட்டி அருகே சுற்றுலாப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி இறந்தது குறித்து ஞாயிற்றுக்கிழமை போலீஸார் விசாரிக்கின்றனர்.  
மதுரையை அடுத்த திருப்புவனத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்து பரம்புபட்டி அருகே  வளைவில் வந்தது. அப்போது சாலையோரத்தில் நடந்து சென்ற  பரம்புப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன்(42) மீது சுற்றுலாப் பேருந்து  மோதியது. இதில் சம்பவ இடத்திலே ராஜேந்திரன் உயிரிழந்தார். 
விபத்து குறித்து பெருங்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.