மதுரையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர். திருநாவுக்கரசு எழுதிய திருக்குறளோடு நாம் எனும் நூல் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு ஐ.ஜி.யான ஆர். திருநாவுக்கரசு, பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சிறந்த பேச்சாளரான இவர் எழுதிய திருக்குறளோடு நாம் எனும் நூல் வெளியீடு, மதுரை புத்தகத் திருவிழாவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, உலகத் திருக்குறள் சங்கத் தலைவர் தொழிலதிபர் வி.ஜி.பி. சந்தோஷம் தலைமை வகித்தார். நூல் வெளியீட்டுக்கு முன், நூலில் இடம்பெற்ற கருத்துகளை உள்ளடக்கிய ஷோபனா லாவண்யா எழுதிய பாடலை குழந்தைகள் இசையுடன் பாடினர். மேலும், நூலின் குறுந்தகடும் வெளியிடப்பட்டது.
நூலின் முதல் படியை, சாஹனபரமானந்த சுவாமிகள் வெளியிட, மறைந்த குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அரசியல் ஆலோசகரான பேராசிரியர் பொன்ராஜ் அதைப் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், நூலின் இணையதளத்தை நகைச்சுவை நடிகர் தாமு வெளியிட, அதை வி.ஜி.பி. சந்தோஷம் பெற்றுக்கொண்டார். நூலின் இசை வடிவக் குறுந்தகடும் வெளியிடப்பட்டது.
இதில், பேராசிரியர் இலக்குவன் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர் வரலொட்டி ரங்கசாமி, கலாம் 2020 விஷன் குழு உறுப்பினர் பேராசிரியர் செந்தூரான், நூலாசிரியர் ஆர்.திருநாவுக்கரசின் தாயார் பத்மாராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆர். திருநாவுக்கரசு ஐபிஎஸ் திருக்குறளோடு நாம் எனும் தலைப்பில் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

