பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழக கடலோரப் பகுதிகளில் ஊசி வலைகளை  பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை கோரி மனு: அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவு

தமிழக கடலோரப் பகுதிகளில் ஊசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

Published On :

தமிழக கடலோரப் பகுதிகளில் ஊசி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நலச்சங்க செயலர் பி.சி.அமுதன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
கடல் வளத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு இல்லாமல் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள ஒருசில மீனவர்கள் தடை செய்யபட்ட ஊசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஊசி வலைகள் கடலில் 2.5 கி.மீ., தூரம் வரை செல்வதால் ஆழ்கடலில் பாதிப்புகள் ஏற்படும். இந்த ஊசி வலைகளில் பிடிபடும் நட்சத்திர மீன் மற்றும் கடற்பாசிகள் போன்றவை வர்த்தகரீதியில் அதிகப்படியான விலைக்கு விற்கப்படுகிறது. தமிழக அரசு 2000 ஆம் ஆண்டு மார்ச் 25 இல் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் "ஊசி வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பதால் கடல் உயிரினங்கள், விலங்குகள், அரிய வகை மீன்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் கடல் உயிரினங்கள் முற்றிலும் அழிந்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை ஊசி வலைகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, தமிழக கடலோர பகுதிகளில் ஊசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.