பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் முதல்வருக்கு கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன்,

Published On :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதாகி மதுரை சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரன், தங்களது விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுத்து, ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை 
விடுதலை செய்ய தீர்மானம் 
நிறைவேற்றி, அதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், தங்களது விடுதலைக்காக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியமைக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து, மதுரை சிறையிலிருக்கும் ரவிச்சந்திரன் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதம் அதிகாரிகளின் பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு புதன்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.