தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் சாட்சியை மிரட்டிய 7 பேர் மீது வழக்கு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் கொலை வழக்கு குற்றவாளிகளை

Updated On :23 ஜனவரி 2019, 7:31 am IST

பாளையங்கோட்டை மத்திய சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பில் கொலை வழக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த ரௌடி கமல் கருப்பு. கடந்த மாதம் மதுரை ஆரப்பாளையம் அருகே பைபாஸ் சாலையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் இவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுதொடர்பாக செல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிள்ளையார் பிரபு உள்பட 7 பேரை கைது செய்தனர். 7 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொலை வழக்குத் தொடர்பாக, கொலையாளிகளை அடையாளம் காட்டுவதற்கான அடையாள அணிவகுப்பு பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கமல் கருப்புவின் சகோதரி கிருஷ்ணவேணி(31), மதுரை நீதித்துறை  நடுவர் மன்றம்(எண் 5-இன்) நடுவர் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
அப்போது கமல் கருப்பு கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையார் பிரபு, சுட்டு முனீஸ், நரி விக்னேஷ், அர்ஜூன், முத்துராமன், சுபீர் அலி, வேதாளம் என்ற வெற்றிவேல் ஆகிய 7 பேரையும் கிருஷ்ணவேணி அடையாளம் காட்டினார். அப்போது 7 பேரும் கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி, கிருஷ்ணவேணியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதுதொடர்பாக கிருஷ்ணவேணி அளித்தப் புகாரின்பேரில் மிரட்டல் விடுத்த 7 பேர் மீதும் செல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.