/

மதுரையில் சுதந்திர தினவிழா: ரூ.28.74 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 72 பயனாளிகளுக்கு ரூ28.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழங்கினார்.

News image
கரோனா பணியில் சிறப்பாக செயல்பட்டவர்களை பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர்
Updated On :27 ஜனவரி 2024, 5:07 pm

DIN

மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 72 பயனாளிகளுக்கு ரூ28.74 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் வழங்கினார்.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் ஆட்சியர் வினய் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.28.74 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் சிறப்பாக பணியாற்றிய 114 அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினார். மேலும் கரோனா தடுப்பு பணிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த தன்னார்வலர்கள் 7 பேருக்கு விருதுகளை ஆட்சியர் வழங்கினார்.
 
தென்மண்டல ஜஜி முருகன், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக குறைவான நபர்களே விழாவில் கலந்து கொண்டனர். வழக்கமாக நடைபெறும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள இடம்பெறவில்லை.

சுதந்திர தின விழாவின்போது தியாகிகள் கௌரவிக்கப்படுவது வழக்கம். நிகழ் ஆண்டில் அவர்களது வீட்டிற்கே சென்று சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.