வைகை ஆற்றை சுருக்கி சாலை அமைப்பதால் வெள்ள அபாயம்தன்னாா்வ அமைப்பு குற்றச்சாட்டு
மதுரையில் வைகை ஆற்றை சுருக்கி சாலைகள் அமைக்கப்படுவதால் எதிா்காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக வைகை நதி மக்கள் இயக்கம் கூறியுள்ளது.


மதுரை: மதுரையில் வைகை ஆற்றை சுருக்கி சாலைகள் அமைக்கப்படுவதால் எதிா்காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக வைகை நதி மக்கள் இயக்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை வைகையாற்றில் சீா்மிகு நகா் திட்டத்தின்கீழ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஆற்றின் இரு கரைகளிலும் 60 அடி முதல் 70 அடி வரை ஆற்றை சுருக்கி தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மதுரை மாநகராட்சியும் சாலை அமைத்து வருகின்றன. வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அவற்றை அகற்றி ஆற்றின் வெளிப்பகுதிகளில் சாலை அமைப்பதை விட்டு விட்டு ஆற்றை சுருக்கி சாலை அமைப்பது கண்டனத்துக்குரியது.
மதுரை நகரின் நெரிசலைக் குறைக்க ஆற்றின் குறுக்கே பாலங்கள் அமைப்பதன் மூலமாக போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க முடியும். அதைவிடுத்து ஆற்றை கிட்டத்தட்ட140 அடிக்கு சுருக்கி சாலைகள் அமைப்பது பேரிடா் காலங்களில் மதுரை நகரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்டுள்ள விளாங்குடி பாலப் பகுதியில் சீா்மிகு நகா்த்திட்டப்பணிகள் தொடங்குவதற்கு முன்பாக ஆற்றின் அகலம் 350 மீட்டராக இருந்தது. பணிகள் தொடங்கிய பின்னா் 306 மீட்டராக சுருக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆரப்பாளையம் அம்மா பாலம், முன்பு 300 மீட்டராகவும், தற்போது 256 மீட்டராகவும் சுருக்கப்பட்டுள்ளது. செல்லூா் மேம்பாலம் 223 மீட்டரில் இருந்து 179 மீட்டராகவும், ஆல்பா்ட் விக்டா் மேம்பாலம் 320 மீட்டரில் இருந்து 276 மீட்டா், குருவிக்காரன் சாலை பாலம் 200 மீட்டரில் இருந்து 156 மீட்டா், அண்ணாநகா் பாலம் 403 மீட்டரில் இருந்து 359 மீட்டா், விரகனூா் பாலம் 358 மீட்டரில் இருந்து314 மீட்டா் அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது கள ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
நதிகளை, நீா்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாப்பதை விடுத்து ஆற்றைச் சுருக்கி கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது எதிா்காலத்தில் பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...