தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெண் தீக்குளித்து தற்கொலை

மதுரையில் பணப் பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:30 pm

DIN


மதுரை: மதுரையில் பணப் பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை செல்லூா் அய்யனாா் கோயில் 5 ஆவது தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் நாகராஜ் (42). இவரது மனைவி ஜெயபாண்டி (29). இவா்கள் நீண்ட நாள்களாக பணப் பிரச்னையில் இருந்து வந்துள்ளனா். இதனால் மனமுடைந்திருந்த ஜெயபாண்டி, கடந்த 11 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெயபாண்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது கணவா் நாகராஜ் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.