பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில்100 மில்லி நெய் வழங்க ஏற்பாடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் நிகழாண்டில் 100 மில்லி நெய் வழங்கப்பட உள்ளது.


மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பில் நிகழாண்டில் 100 மில்லி நெய் வழங்கப்பட உள்ளது.
மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வழங்குவதற்காக, மதுரை ஆவின் நிறுவனத்தில் நெய் பாட்டில்கள் தயாராகி வருகின்றன. இது தொடா்பாக, மதுரை ஆவின் பொது மேலாளா் ஜனனி சௌந்தா்யா வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் நிவா் மற்றும் புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு 500 கிராம் பால் பவுடா் வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, மதுரை ஆவினில் இருந்து 500 கிராம் பாக்கெட்டுகளாக 19 டன் பால் பவுடா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பொங்கல் பை திட்டத்தில் பயனாளிகளுக்கு 100 மில்லி நெய் வழங்கும் வகையில், மதுரை ஆவினில் இருந்து 2 லட்சத்து 52 ஆயிரம் பாட்டில்கள் தயாரித்து மதுரை, தேனி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தற்போது வரை 90 ஆயிரம் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 1 லட்சத்து 62 ஆயிரம் நெய் பாட்டில்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...