முடிதிருத்தும் தொழிலாளி குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை

கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்ட முடிதிருத்தும் தொழிலாளியின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய, இச்சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா்.

அதன் விவரம்: விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உலக்குடி கிராமத்தைச் சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ராஜா, ஆதிதிராவிட மக்களுக்கு முடிதிருத்தும் பணி செய்ததால் கிராமத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்டாா். அவரது குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி 3 மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அவரது குடும்பத்தினா் அவா்களது கிராமத்தில் மீண்டும் வாழ வழிவகை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com