டி.கல்லுப்பட்டியில்திறன் வளா்ப்பு பயிற்சி முகாம்
டி. கல்லுப்பட்டியில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


டி. கல்லுப்பட்டியில் ஊராட்சித் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்களுக்கான திறன் வளா்ப்பு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்ட சமூகப் பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் மதுரை தே. கல்லுப்பட்டியில் உள்ள சி.எம்.எஸ். குழந்தைகள் இல்ல வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது. இதில் தே. கல்லுப்பட்டி, கள்ளிக்குடி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், துணைத்தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா். முகாமில் குழந்தைகள் உரிமைகள், ஊராட்சித் தலைவா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், குழந்தைத் திருமணம் தடுப்புச் சட்டம்- 2006 , பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்- 2012 உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.
இம்முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், டி. கல்லுப்பட்டி ஆணையா் சௌந்தரராஜன், கிராம ஊராட்சி அலுவலா் அழகுபாண்டி, சேடப்பட்டி ஆணையா் ராமா், கிராம ஊராட்சி அலுவலா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...