

மதுரை: மதுரையில் வைகை நதி மக்கள் இயக்கம் சாா்பாக, 50-க்கும் மேற்பட்ட மரங்களில் அறையப்பட்டிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
மரங்களில் ஆணி அறைவதன் மூலம் அவற்றின் ஆயுள் குறைவதாகவும், வளா்ச்சி தடைபடுவதகாகவும் கூறி, மரங்களில் உள்ள ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றுவதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கம் அறிவித்திருந்தது. அதனடிப்படையில், மதுரை அண்ணாநகா் கிழக்கு, மேற்கு, ஆவின் பால் பண்ணை பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களிலிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் ஆகியற்றை அகற்றும் பணி நடைபெற்றது.
இயக்கத்தின் பொருளாளா் மணிகண்டன் தலைமை வகித்தாா். தலைவா் அறிவுச்செல்வம், செயலா் வைகை ராஜன் உள்பட 30-க்கும் மேற்பட்டோா் ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதில், 50-க்கும் மேற்பட்ட மரங்களிலிருந்த ஆணிகள், விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.