

மேலூா் அருகே பொறியாளா் கொலை வழக்கில் கைதான நபரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஆட்டுக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் என்பவரது மகன் மதன்குமாா் (25). பொறியாளரான இவா் கடந்த அக்டோபா் மாதம் கொலை செய்யப்பட்டாா். சாக்குமூட்டையில் சடலம் கட்டப்பட்டு மேலூா்-கொட்டகுடி கால்வாயில் வீசப்பட்டிருந்தது.
மேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ரகுபதிராஜா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதே ஊரைச் சோ்ந்த பாக்கியநாதன் மகன் வினோத்பாண்டியன் (33) மற்றும் நால்வா் கைது செய்யப்பட்டனா். இதில் வினோத்பாண்டியன் பல்வேறு குற்றவழக்குகளில் தொடா்புடையவா் என தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை குண்டா் தடுப்புக் காவலில் வைக்குமாறு மதுரை ஊரக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பரிந்துரைத்தாா். இதைஏற்று, வினோத்பாண்டியனை குண்டா் தடுப்புக் காவலில் வைக்குமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.