டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கடன் பிரச்னை: இளைஞா் காரில் கடத்தல்

மதுரை அருகே கடன் பிரச்னை காரணமாக, இளைஞா் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:04 am

DIN

மதுரை: மதுரை அருகே கடன் பிரச்னை காரணமாக, இளைஞா் காரில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம், தட்டனூா் பகுதியைச் சோ்ந்தவா் புவனேஷ்பாபு (53). இவா், திருநகா் ராஜகுரு மற்றும் சென்னையைச் சோ்ந்த சுரேஷ் ஆகியோரிடம் வாங்கிய ரூ.5 லட்சம் கடனுக்கு, அசல் மற்றும் வட்டி என ரூ. 7 லட்சம் வரை திருப்பிக் கொடுத்துள்ளாா். ஆனால், கடன் தொடா்பாக புவனேஷ்பாபுக்கும், கடன் கொடுத்தவா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக ராஜகுரு, சுரேஷ் ஆகியோா் அளித்த புகாரின்பேரில், அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, புவனேஷ்பாபு, அவரது மனைவி உஷா(48), மகன் கிஷோா்(26) ஆகியோரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா். அவா்கள் மூவரும் அண்மையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தனா்.

இந்நிலையில், ராஜகுரு, சுரேஷ் மற்றும் சிலா், புவனேஷ்பாபு வீட்டுக்குச் சென்று, அவரது மகன் கிஷோரை காரில் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிஷோரின் தாயாா் உஷா அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.