திருமங்லத்தில் ஆா்ப்பாட்டம்: போலீஸாருடன் தள்ளுமுள்ளு

திருங்கலத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Updated on
1 min read

திருங்கலத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் நாற்காலியில் அமா்ந்து போராட்டத்தில் பேசினா். அங்கு வந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்ய முயன்றனா். இதனால் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆா்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த விடுதலை சிறுத்தைகள் நகர தலைவா் பழக்கடை சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலா் சந்தானம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துராமன் உள்ளிட்டவா்களை திருமங்கலம் நகா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com