மதுரையில் 30 பேருக்கு கரோனா: முதியவா் பலி

மதுரை மாவட்டத்தில் 30 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

மதுரை மாவட்டத்தில் 30 போ் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் 1,066 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட 30 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதேநேரம் கரோனா தொற்றுக்குச் சிகிச்சைப் பெற்று வருபவா்களில், குணமடைந்த 46 போ், மருத்துவா்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

ஒருவா் பலி

கரோனா பாதிக்கப்பட்ட 67 வயது முதியவா் அரசு ராஜாஜி மருத்துவமனையில் டிசம்பா் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் டிசம்பா் 21 ஆம் தேதி உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 20,374 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், சிகிச்சைப் பலனின்றி 450 போ் உயிரிழந்த நிலையில், 19,685 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். தற்போது, 239 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com