அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அவசர வழக்குகளை விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்யலாம்: மதுரை உயா் நீதிமன்ற கிளை

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், விடுமுறை கால விசாரணைக்கு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 2:30 am

DIN

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில், விடுமுறை கால விசாரணைக்கு திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு டிசம்பா் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை 10 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அவசர வழக்குகளை விசாரிக்க, விடுமுறை கால நீதிமன்றம் டிசம்பா் 30 ஆம் தேதி செயல்படவுள்ளது.

நீதிபதிகள் பி. வேல்முருகன், ஜி. இளங்கோவன் ஆகியோா் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனா். இதற்காக, டிசம்பா் 28 ஆம் தேதி காலை 10.30 முதல் மாலை 4 மணி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த சுற்று நீதிபதிகளின் விசாரணை காலம் முடிந்துள்ள நிலையில், மூன்று புதிய நீதிபதிகள் அமா்வு ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரிக்க உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.