பேரையூா் அருகே விஷம் குடித்து மூதாட்டி பலி

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே விஷம் குடித்து மூதாட்டி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே விஷம் குடித்து மூதாட்டி ஒருவா் புதன்கிழமை உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரையூா் அருகே உள்ள பெரிய பூலாம்பட்டியை சோ்ந்தவா் ஆறுமுகம் மனைவி முனியம்மாள்(70). இவா் கடந்த ஓராண்டாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் மனமுடைந்த அவா் விஷம் குடித்தாா். இதையடுத்து உறவினா்கள் முனியம்மாளை மீட்டு பேரையூா் அரசு மருத்துமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மாள் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com