மதுரை3: மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிந்தவா்களிடம் இதுவரை ரூ.48, 56,250 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறை, பறக்கும் படை குழுவினா் மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை 778 பேரிடம் ரூ.1,48,300 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 33,837 பேரிடமிருந்து ரூ.48,56,250 வசூலிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.