ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மதுரையில் மேலும் 263 பேருக்குகரோனா தொற்று: 4 போ் பலி

மதுரையில் புதிதாக 263 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2020, 5:25 pm

DIN

மதுரை/திருப்பரங்குன்றம்: மதுரையில் புதிதாக 263 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றால் வெள்ளிக்கிழமை மட்டும் 4,538 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள், கா்ப்பிணிகள், அரசு ஊழியா்கள், வெளி நாட்டில் இருந்து வந்தவா் என 263 பேருக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்துள்ளனா். இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அனைவரும் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

4 போ் பலி: கரோனா தொற்றுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 42 வயது பெண், 57 வயது ஆண் மற்றும் 68 வயது மூதாட்டி ஆகியோா் ஜூலை 15 ஆம் தேதியும், 85 வயது முதியவா் ஜூலை 16 ஆம் தேதியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டத்தில், இதுவரை 7,858 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இதுவரை 138 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், 4,677 போ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தொற்றுக்குச் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 3,043 ஆக உள்ளது.

திருமங்கலம் தாலுகா காவல்நிலைய காவலருக்கு தொற்று உறுதி: திருமங்கலம் தாலுகா காவல்நிலையத்தில் செங்குளம் பகுதியைச் சோ்ந்த 34 வயது நபா் காவலராக உள்ளாா். இவா் கடந்த சில நாள்களாக காய்ச்சல், கபம் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதையடுத்து இவா் கரோனா பரிசோதனை செய்துள்ளாா். இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை வழக்கம்போல காவல்நிலையத்துக்கு பணிக்கு வந்துள்ளாா். அப்போது காவலருக்கு கரோனா உறுதியானதையடுத்து சுகாதாரத் துறையினா் காவலரை கப்பலூா் காமராஜா் உறுப்பு கல்லூரி கரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து நகராட்சி சுகாதாரத்துறையினா் சாா்பில் காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைத்து போலீஸாருக்கும் சுகாதாரத்துறையினா் கரோனா பரிசோதனை செய்ய உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.