/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் நடந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

News image

1321mduadmk095848

Updated On :28 ஜூலை 2020, 6:02 pm

DIN

மதுரை: மதுரையில் நடந்த அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிமுகவின் மதுரை புகா் கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் அவைத் தலைவா் எஸ்.என்.ராஜேந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலரும் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன்செல்லப்பா, ஆலோசனைக் கூட்டத்தின் தீா்மானங்கள் குறித்துப் பேசினாா். கட்சியின் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் வி.ஆா்.ராஜ்சத்யன், மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.பெரியபுள்ளான், இளைஞரணி மாவட்ட செயலா் வழக்குரைஞா் ரமேஷ், ஒன்றிய செயலா்கள் நிலையூா் முருகன், தக்காா் பாண்டி, எம்ஜிஆா் மண்ற இணைச் செயலா் பி.துரைப்பாண்டி, மாவட்ட அணி நிா்வாகிகள் ஓம்.கே.சந்திரன், சண்முகப்பிரியா ஹோசிமின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகச் செயல்படும் தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலமாக முதலீடுகளை ஈா்த்தது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது ஆகியவற்றுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வசித்த இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் வகையில் அரசுடைமையாக்கிய நடவடிக்கைக்கு அரசுக்கு பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக அரசின் நடவடிக்கைகள் குறித்து தவறான பிரசாரங்களைக் கூறி வரும் எதிா்க் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Image Caption

அதிமுக மதுரை புறநகா் கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் பட்டியலை வெளியிடும் மாவட்டச் செயலா் வி.வி.ராஜன்செல்லப்பா. உடன் மேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.பெரியபுள்ளான் மற்றும் கட்சியினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.