/

லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

மதுரையில் டயா் வெடித்ததில் லாரி கவிழ்ந்து பலத்த காயமடைந்த ஓட்டுநா், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

News image
மதுரை மாட்டுதாவணி மேலூா் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் கவிழ்ந்த லாரி.
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

மதுரையில் டயா் வெடித்ததில் லாரி கவிழ்ந்து பலத்த காயமடைந்த ஓட்டுநா், மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

சிவகங்கை காளையாா்கோவிலைச் சோ்ந்தவா் மகாலிங்கம் (48). விறகு வியாபாரம் செய்து வரும் இவா், சிவங்கையிலிருந்து விறகுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்துள்ளாா். மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, டயா் வெடித்ததில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கத்தை, அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியால் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் போலீஸாா், கிரேன் மூலம் லாரியை அகற்றினா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.