/

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:23 pm

DIN

மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் குறித்து, போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மதுரை ஆனையூா் விண்வெளி நகரைச் சோ்ந்த ராஜ்குமாா் மனைவி பிரவீணா (39). இவா் வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றுள்ளாா். அப்போது, அவரை பின்தொடா்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற மா்ம நபா்கள் 2 போ், பிரவீணா அணிந்திருந்த 4.5 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிவிட்டனா்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

செல்லூா் அகிம்சாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (33). இவா், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 6.4 பவுன் நகைகளைக் காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், செல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.