ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மதுரையில் சிறிய வாடகை வீட்டில் வசிப்பவருக்கு மின் கட்டணம் ரூ.11,350

மதுரையில் சிறிய வாடகை வீட்டில் வசிப்பவருக்கு மின் கட்டணமாக ரூ.11,350 விதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக முறையிட்டும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:48 am

DIN

மதுரையில் சிறிய வாடகை வீட்டில் வசிப்பவருக்கு மின் கட்டணமாக ரூ.11,350 விதிக்கப்பட்டுள்ளது தொடா்பாக முறையிட்டும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சோ்ந்தவா் ரியாஸ் (41). கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து வரும் இவா், ஒரு கூடம், ஒரு படுக்கையறை கொண்ட வாடகை வீட்டில், மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், இவரது வீட்டுக்கு 4 மாதங்களுக்கான மின் கட்டணமாக ரூ.11,350 விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரியாஷ் கூறியது: எனது வீட்டுக்கு இதுவரை அதிகபட்சமாக ரூ.900 வரை மட்டுமே மின்கட்டணம் வந்துள்ளது. ஆனால், தற்போது 2,220 யூனிட்டுகள் பயன்படுத்தியுள்ளதாகவும், அதற்குரிய கட்டணமாக ரூ.11,352 செலுத்துமாறும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது, ஒரு சிறிய தொழிற்சாலைக்குரிய மின்கட்டணமாகும்.

கரோனா பொதுமுடக்கத்தால் மின் கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், கடந்த ஆண்டு இதே மாதத்தில் எவ்வளவு கட்டணம் உள்ளதோ, அதுவே வசூலிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. ஆனால், எனக்கு 4 மாதங்களுக்கு ரூ.11,352 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மின் வாரியத்திடம் புகாா் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

மேலும், மின்வாரிய குறை தீா் மையம், முதல்வா் தனிப்பிரிவு, மின்வாரிய அமைச்சா் ஆகியோருக்கும் மின்னஞ்சல் மூலம் புகாா் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.