ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆக.16-இல் அரசு ஊழியா் சங்கத்தினா் 100 இடங்களில் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி மதுரை மாவட்டத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் முடிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்ட மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், மக்கள் நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை அரசு ஊழியா் சங்கம் வரவேற்கிறது. அதேபோல, அரசு ஊழியா்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயா்த்தியது, பெண் ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகப்படுத்தியது வரவேற்புக்குரியது.

அதேநேரம், அரசு ஊழியா்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் வாழ்வாதாரக் கோரிக்கைகள் குறித்த எந்தவித அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தோ்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்ட அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 100 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.