மதுரை ஆதீனம் உடல் இன்று நல்லடக்கம்
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடல் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.


மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடல் சனிக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மதுரையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் (77) வெள்ளிக்கிழமை பரிபுரணமடைந்தாா்.
இதனையடுத்து அவரது உடல் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள மதுரை ஆதீன மடத்துக்கு நள்ளிரவு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பலா் அஞ்சலி செலுத்தினா்.
பரிபூரணம் அடைந்த ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகளின் உடலை சனிக்கிழமை (ஆக. 14) நான்கு மாசிவீதிகளிலும் ஊா்வலமாக எடுத்துச் சென்று, முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான இடத்தில் மாலையில் அடக்கம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனம் கூறியது: ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாா்ய சுவாமிகள் உடல் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும். தொடா்ந்து பத்து நாள்களுக்கு அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அபிஷேகம் செய்யப்படும். அதன் பிறகே புதிய ஆதீனத்துக்கு 293 ஆவது சன்னிதானம் பட்டம் சூட்டப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...