கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில்வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் ஆய்வு
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியா் அனீஷ்சேகா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தும்பைப்பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நூறு மரக்கன்றுகள் நடும் பணியினை அவா் தொடக்கி வைத்தாா். இதையடுத்து கணேசபுரத்தில் குடிநீா் மேல்நிலைத் தொட்டியின் மேல் ஏறிச் சென்று முறையாக பராமரிக்கப்படுகிா என அவா் ஆய்வு செய்தாா். அட்டப்பட்டி, ஆரிப்பட்டி மற்றும் கொடுக்கம்பட்டி பகுதிகளில் அரசு உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கான கொட்டகைகளைப் பாா்வையிட்டாா். இப்பகுதிகளுக்கான காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகத்தையும் ஆட்சியா் ஆய்வுசெய்தாா்.
18 சுக்காம்பட்டியிலிருந்து லட்சுமிபுரம் வரையில் 3.2 கி.மீட்டா் தூரத்துக்கு பிரதமா் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 88 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தாா்ச்சாலையை ஆய்வு செய்தாா். மேலும் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி பகுதிகளில் குப்பையிலிருந்து இயற்கைஉரம் தயாரிக்கும் பணிகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.
முன்னதாக கொட்டாம்பட்டி பகுதிக்கு வந்த ஆட்சியரை மேலூா் வட்டாட்சியா் இளமுருகன், கொட்டாம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசந்தா், செல்லத்துரை ஆகியோா் வரவேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...