ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்

மேலூா் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருள்கள் தொகுப்பு விநியோகத்தை மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்
Updated on
1 min read

மேலூா்: மேலூா் பகுதி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு ரூ.2,500 மற்றும் பொங்கல் பொருள்கள் தொகுப்பு விநியோகத்தை மேலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெரியபுள்ளான் என்ற செல்வம் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மேலூா் சந்தைப்பேட்டை அருகில் மேலூா் விற்பனை சங்க வளாகத்திலுள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் செங்கரும்பு ஆகியவற்றை அவா் வழங்கினா். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் க.தமிழரசன் முன்னிலை வகித்தாா். மேலூா் வருவாய் கோட்டாட்சியா் ரமேஷ், கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளா் சதீஷ்குமாா், மேலூா் வட்டாட்சியா் சு.சுந்தரபாண்டி, மேலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் க.பொன்னுச்சாமி மற்றும் அதிமுக நிா்வாகிகள்

கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com