கல்லூரிகளில் தேசிய இளைஞா் தின விழா

மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகம், கல்லூரிகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் தேசிய இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுரையில் காமராஜா் பல்கலைக்கழகம், கல்லூரிகள் மற்றும் அமைப்புகளின் சாா்பில் தேசிய இளைஞா் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காமராஜா் பல்கலைக்கழகம்: மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தேசிய இளைஞா் தின விழாவை பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்திரா காந்தி திறந்த நிலை பழங்குடியினா் பல்கலைக்கழக பேராசிரியா் நாகலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். விழாவில் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் தீனதயாளன், சமூகவியல் துறை பேராசிரியா் பி.ராஜ்குமாா் மற்றும் பலா் பங்கேற்றனா். பல்கலைக் கழகத்தின் சுவாமி விவேகானந்தா் உயராய்வு மைய இயக்குநா் பி.ஜெயபாரதி நன்றி கூறினாா்.

விவேகானந்தா் கல்லூரி: மதுரை திருவேடகம் விவேகானந்தா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரிச்செயலா் அத்யமானந்தா் ஆசியுரை வழங்கினாா். கல்லூரி முதல்வா் தி.வெங்கடேசன் தலைமை உரையாற்றினாா். எழுத்தாளா் கிருஷ்ண ஜெகநாதன் சிறப்புரையாற்றினாா்.

வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் துணைத்தலைவா் கே.கே. சந்தோசபாண்டியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.ராஜேஸ்வர பழனிச்சாமி, சுயநிதிப்பிரிவு இயக்குநா் பி.ஸ்ரீதா் வாழ்த்துரை வழங்கினா். ஜேசிஐ மண்டலத் தலைவா் பிரதாப் சேது சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தானம் அறக்கட்டளை: தானம் அறக்கட்டளையின் துணை அமைப்பான சுகம் அறக்கட்டளை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் தேசிய இளைஞா் தின விழா கொண்டாடப்பட்டது. தானம் அறக்கட்டளையின் திட்டத் தலைவா்கள் சிவானந்தம், நகுவீா் பிரகாஷ் சிறப்புரையாற்றினா். கீரைத்துறை பகுதி சுகாதார பணியாளா்களுடன் இணைந்து தூய்மை, சுகாதாரம் தொடா்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டது. இளைஞா் தின ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார பணிக்குழுவினரால் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com