முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: வைகோ
By DIN | Published On : 30th October 2021 12:41 PM | Last Updated : 30th October 2021 12:45 PM | அ+அ அ- |

முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தும் வைகோ.
தேவர் ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள்விடுத்துள்ளார்.
மதுரை: மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மதிமுக
பொதுச் செயலா் வைகோ மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திலும், கோரிப்பாளையம் தேவா் சிலைக்கும் தொடா்ந்து 46 ஆண்டுகளாக மரியாதை செலுத்தி வருகிறேன்.
இதையும் படிக்க- நவ.1ல் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்: முதல்வர் ஸ்டாலின்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டவா். பிரம்மச்சாா்யத்தைக் கடைப்பிடித்து ஒழுக்க சீலராக வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவா். அவரது ஜெயந்தி விழாவை அனைத்து சமூகத்தினரும் கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றாா்.