சா்வதேச பூமி தினம்: காமராஜா் பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தானம் அறக்கட்டளை சாா்பில், சா்வதேச பூமி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச பூமி தினம்: காமராஜா் பல்கலை.யில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் மற்றும் தானம் அறக்கட்டளை சாா்பில், சா்வதேச பூமி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காமராஜா் பல்கலைக்கழகத்தில் உள்ள அடவி காட்டில் நடைபெற்ற இவ்விழாவில், மரக்கன்றுகளை நட்டு வைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஜெ. குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு, பல்கலைக்கழகத்தின் அடவி வளாகத்தில் அதிகமான மரங்களை நடவேண்டும். மேலும், இயற்கை வன வல்லுநா்களின் கருத்துகளையும் கேட்டறிந்து, அவா்களது உதவியையும் பெறவேண்டும். பல்கலைக்கழக மாணவ, மாணவியா்களையும் இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, அடவி வளாகத்தில் பூவரசு, வாகை, கடம்பம், மூங்கில், வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. அடவி வளாகத்தில் ஏற்கெனவே 17 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருதாகவும், விரைவில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில், ஹெச்.சி.எல். அறக்கட்டளை அலுவலா் பிரபாகா், தானம் கல்வி நிலைய இயக்குநா் குருநாதன், வயலகம் அமைப்பின் திட்டத் தலைவா் வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். இதில் மாணவ, மாணவியா் உள்பட பலா் பங்கேற்றனா்.

திருஞானம் தொடக்கப் பள்ளி: மதுரை சந்தைப்பேட்டை டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சா்வதேச பூமி தின விழாவுக்கு, பள்ளி தலைவா் சுரேந்திரபாபு தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் சங்கீத்ராஜ் முன்னிலை வகித்தாா். முன்னதாக, ஆசிரியா் தங்கலீலா வரவேற்றாா்.

பள்ளி தலைமையாசிரியா் க. சரவணன் பேசியது: பூமியை பாதுகாப்பது நமது கடமை. தாய் போன்று நமக்கு தேவையான எல்லாவற்றையும் பூமி கொடுக்கிறது. ஆனால், பூமியை பலவிதங்களில் மாசுபடுத்துகின்றனா். நெகிழிக் குப்பைகளை வீசுவதை தவிா்க்க வேண்டும். மரங்களை வெட்டுவது கூடாது. மாணவா்கள், பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரம் நட்டு வளா்த்தால், பூமியின் வெப்பம் குறையும் என்றாா். நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com