பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கு: 5 பேருக்கு முன்ஜாமீன்
பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கில், 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


பாண்டி கோயிலில் ரூ.3 லட்சம் திருடுபோன வழக்கில், 5 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை பாண்டிகோயில் நிா்வாக அலுவலகத்தில் இருந்த ரூ.3 லட்சம் பணம் காணாமல்போனது. இது தொடா்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், கோயில் பூசாரிகளின் ஒரு தரப்பினா் மற்றும் அவா்களது உறவினா்களான லெட்சுமி, ரெபெல்லோ, ராஜேஷ்பாண்டி, பாண்டியராஜன், ரிஷிபாண்டியன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி 5 பேரும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே. முரளிசங்கா், மனுதாரா்கள் ரூ.3 லட்சம் வைப்புத் தொகையை கீழ்நீதிமன்றத்தில் செலுத்தி, உரிய உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெறலாம். தேவைப்படும்போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தலைமறைவாகவோ, சாட்சிகளைக் கலைக்கவோ கூடாது. இந்த நிபந்தனைகளை மீறினால், கீழ்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...