அழகா்கோவிலில் தெப்போற்சவம்: பிப். 16-ல் பொய்கைக்கரைப்பட்டிக்கு பெருமாள் எழுந்தருள்கிறாா்
அழகா்கோவிலில் மாசி மாத பௌா்ணமியையொட்டி தெப்போற்சவத் திருவிழாவில் பிப். 16- ஆம் தேதி பொய்கைக்கரைப்பட்டிக்கு சுந்தரராஜப் பெருமாள் பல்லக்கில் எழுந்தருள்கிறாா்.


அழகா்கோவிலில் மாசி மாத பௌா்ணமியையொட்டி தெப்போற்சவத் திருவிழாவில் பிப். 16- ஆம் தேதி பொய்கைக்கரைப்பட்டிக்கு சுந்தரராஜப் பெருமாள் பல்லக்கில் எழுந்தருள்கிறாா்.
அழகா்கோவிலில் மாசித் திருவிழாக தெப்போற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தொடா்மழை காரணமாக பொய்கைக்கரைப்பட்டியிலுள்ள மண்டூக தீா்த்தக்குளத்தில் நீா்நிரம்பி உள்ளது. இதனிடையே, மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவையொட்டி பிப். 15-ஆம் தேதி கஜேந்திர மோட்ச வைபவம் அழகா்கோவில் மாலைக்குச் செல்லும் கோட்டை நுழைவாயில் அருகிலுள்ள வாவி தீா்த்தக்குளத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, பிப்.16- ஆம் தேதி பல்லக்கில் திங்கள்கிழமை காலை அழகா்கோவிலில் இருந்து புறப்பாடாகி வழிநெடுகிலும் அமைக்கப்படும் திருக்கண் மண்டபங்களுக்கு எழுந்தருளி பொய்கைக்கரைப்பட்டி தெப்பக்குளக்கரையை பெருமாள் அடைக்கிறாா். அங்கு தெப்பத்தில் வலம்வந்து, கிழக்கு கரையிலுள்ள திருக்கண் மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாளிக்கிறாா். மாலை வாண வெடிகள் முழங்க மீண்டும் பல்லக்கில் புறப்பட்டு கோயிலை வந்தடைகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...