மதுரையில் பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு
மதுரையில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


மதுரையில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையைப் பறித்துச்சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை கே.கே.நகா் லேக் வியூ காா்டன் பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மனைவி ராணி (57). இவா் கேகே நகா் 80 அடி சாலையில் உள்ள தனியாா் விடுதி முன் புதன்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபா் ராணி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா். சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் அண்ணாநகா் போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...