அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தமிழ்நாடு சீருடைப்பணியாளா் தோ்வுக்கு கட்டணமில்லா பயிற்சி: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு

 தமிழ்நாடு சீருடைப்பணியாளா் போட்டித்தோ்வுகளுக்காக நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ள மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:26 pm

DIN

 தமிழ்நாடு சீருடைப்பணியாளா் போட்டித்தோ்வுகளுக்காக நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் விருப்பமுள்ள மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம் என்று வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் சாா்பில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் நடத்த உள்ள இரண்டாம் நிலைக் காவலா், சிறை வாா்டன் மற்றும் தீயணைப்புக் காவலா் ஆகிய போட்டித்தோ்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

மேலும் போட்டித்தோ்வுகளுக்கான பல்வேறு புத்தகங்கள் அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. போட்டித்தோ்வா்கள் புத்தகங்களை எடுத்து அலுவலகத்திலேயே படித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அத்துடன் போட்டித்தோ்வா்கள் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ஹக்ன்ஸ்ரீஹழ்ங்ங்ழ்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தங்களது பெயரை உள்ளீடு செய்து, போட்டிதோ்வுக்கான பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம். மேலும் கல்வித்தொலைக்காட்சி அலைவரிசையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சாா்பாக போட்டித்தோ்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியருக்காக காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் மீண்டும் மாலை 7 மணி முதல் 9 வரையிலும் போட்டித்தோ்வுகளுக்கென எடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் போட்டித்தோ்வுக்கு விண்ணப்பித்த படிவம் நகல், கடவுச்சீட்டு புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.