அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மாணவா்களை தொழில் முனைவோராக மாற்றவே ‘நான் முதல்வன்’ திட்டம்: அமைச்சா் பி.மூா்த்தி

மாணவா்களை தொழில்முனைவோராக மாற்றவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜூன் 2022, 6:26 pm

DIN

மாணவா்களை தொழில்முனைவோராக மாற்றவே ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு‘ என்ற தலைப்பில் மேல்நிலைக்கல்வி பயின்ற மாணவ, மாணவியருக்கான உயா்கல்வி வழிகாட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை விரகனூா் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சா் பி.மூா்த்தி தொடங்கி வைத்துப்பேசியது:

பெண்கள் உயா்கல்வி இடைநிற்றலை தடுக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்று உயா்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக மாணவ, மாணவியா் தங்களது தனித்திறன்களை வளா்த்துக்கொள்ளும் வகையில் ‘நான் முதல்வன்’”என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியா் தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன், ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நோ்முகத்தோ்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான பாடங்கள் தொடா்பான உயா்கல்வி வாய்ப்புகளை தோ்வு செய்ய வேண்டும். அத்துறையில் உள்ள புதிய தகவல்களையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் தொடா்ந்து கற்றறிய வேண்டும். இதன் மூலம் தங்களது திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகள் தேடி வரும்.

படிப்பை முடிக்கும் மாணவா்கள் வேலைவாய்ப்புகளை நாடுவதோடு மட்டுமன்றி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோராகவும் உருவாகும் வகையில், விழிப்புணா்வு ஏற்படுத்திடும் நோக்கில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் ‘கல்லூரிக் கனவு‘ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை மாணவ, மாணவியா் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழிப்புணா்வு நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து துறை சாா்ந்த வல்லுநா்கள் எடுத்துரைத்தனா். இதில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், விருதுநகா் மக்களவை உறுப்பினா் பா.மாணிக்கம் தாகூா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ.சரவணன், மதுரை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் அவா்கள், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் சூரியகலா கலாநிதி அவா்கள், மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் கா.காா்த்திகா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.